பிரதமர் பதவிக்கு மோடி அவமரியாதை செய்துவிட்டார் சித்தராமையா கடும் தாக்கு
பிரதமர் பதவிக்கு மோடி அவமரியாதை செய்துவிட்டதாக சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு,
பிரதமர் பதவிக்கு மோடி அவமரியாதை செய்துவிட்டதாக சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
ஊழல்கள் அதிகமாக நடந்தன
பெங்களூரு கெம்பேகவுடா லே-அவுட்டில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாகடி ரோடு கொல்லஹட்டி என்ற பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளோம். ஊழல் இல்லாத நல்லாட்சியை நடத்தி இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு முன்பு இருந்த பா.ஜனதா ஆட்சியில் ஊழல்கள் அதிகமாக நடந்தன. ஊழல் செய்தவர்கள் சிறைக்கு சென்றனர். அவர்கள் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை.
ஆதாரங்கள் உள்ளதா?
எங்கள் அரசு மீது பிரதமர் மோடி 10 சதவீத ‘கமிஷன்‘ அரசு என்ற குற்றம்சாட்டு கிறார். அதற்கு அவரிடம் ஆதாரங்கள் உள்ளதா?. கர்நாடகத்தில் முன்பு பா.ஜனதா தான் 90 சதவீத ‘கமிஷன்‘ பெற்று ஆட்சியை நடத்தியது. பிரதமர் பதவிக்கு மோடி அவமரியாதை செய்துவிட்டார். அந்த பதவியில் நீடிக்க அவருக்கு தகுதி இல்லை.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல பிரதமர்கள் நாட்டை ஆண்டனர். ஆனால் மோடியை போல் இவ்வளவு பொய் பேசும் பிரதமர்களை நான் பார்த்தது இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை. அதை விடுத்து மக்களை ஏமாற்றும் விதத்தில் பேசுகிறார். அவரிடம் எந்த செயல்பாடும் இல்லை. பேசுவது மட்டுமே அவரது சாதனை.
பா.ஜனதா வெற்றி பெற முடியாது
கர்நாடகத்திற்கு மோடி எத்தனை முறை வந்து பேசினாலும், பா.ஜனதா வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பது உறுதி. பெங்களூருவின் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கினோம். இதனால் சாலைகள் மேம்பாடு, குடிநீர் உள்பட ஏராளமான வசதிகள் மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் 28 தொகுதிகள் உள்ளன. இதில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜனதாவினர் பொய்யை திரும்ப, திரும்ப பேசுகிறார்கள். இதன் மூலம் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். இது சாத்தியம் இல்லை.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Tags :
Next Story