பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் உள்ள சீயோன் ஆலயத்தின் 28-வது ஆண்டு பிரதிஷ்டை-அசன பண்டிகை
பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் உள்ள சீயோன் ஆலயத்தின் 28-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
பெங்களூரு,
பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் உள்ள சீயோன் ஆலயத்தின் 28-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பிரதிஷ்டை பண்டிகை
பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் நேதாஜிநகரில் சீயோன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 28-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஆலய பிரதிஷ்டை பண்டிகை சபையின் ஆயர் ஜெரால்டு ஜான் தலைமையில் திருவிருந்து ஆராதனையுடன் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு திருநெல்வேலி திருமண்டல கீழச்சுரண்டை சேகர குருவானவர் சாமுவேல் டேவிட் நவமணி, கர்த்தரின் நன்மைகள் என்ற பெயரில் தேவ செய்தி வழங்கி பேசினார்.
அவர் தேவ செய்தி வெளியிட்டு பேசும் போது, ‘தீமைகளை கடவுள் நன்மைகளாக மாற்றுவார், நம்முடைய நன்மைகளை பரிபூரணம் அடைய செய்வார், நமது உழைப்பு, உயர்வுக்கு கர்த்தர் உதவுவார், அதனால் இந்த சபை பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது,‘ என்றார். இந்த ஆராதனையில் இன்னிசையுடன் கூடிய தெய்வீக பாடல்கள் இடம் பெற்றன. ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் திரளாக கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர். மேலும் காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், கர்நாடக சென்ட்ரல் டயாஸ் வக்கீல் டேனியல், தூய லூக்கா ஆலய போதகர் வில்சன் தாசன் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆராதனையில் கலந்துகொண்டனர்.
அசன விருந்து
பின்னர் மதியம் 12 மணிக்கு அசன விருந்து மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அசன விருந்தை சபையின் ஆயர் ஜெரால்டு ஜான் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறும் போது, “சீயோன் ஆலய திருச்சபை உருவாகி 27 ஆண்டுகள் முடிந்து 28-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த ஆண்டு செய்த நன்மைக்காக கர்த்தரை நினைவு கூர்ந்து நன்றி செலுத்த பிரதிஷ்டை பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடவுளை ஆராதிக்க முதலில் ஜெபக்குழுவாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது சீயோன் ஆலயமாக கடவுளின் அருளால் வளர்ந்துள்ளது. மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக அமர்ந்து ஆதாரனை செய்ய ஆலயத்தில் மேல்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது“ என்றார்.
ஆயிரக்கணக்கானோர்...
சீயோன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற அசன விருந்துக்கு கே.பி.அக்ரஹாரம், நேதாஜிநகர், மாகடி ரோடு, அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோருக்கு, அறுசுவை உணவு வழங்கப்பட்டது. பிரதிஷ்டை விழா, அசன பண்டிகையையொட்டி சீயோன் ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை சபை ஆயர் ஜெரால்டு ஜான், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சாலமோன், உதவி ஆயர் தர்மஞான செல்வின், தாமஸ்எடிசன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள், பெண்கள் ஐக்கியம், இளைஞர்கள் ஐக்கியம், ஓய்வு நாள் பாடசாலை குழு, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்திருந்தார்கள்.

Related Tags :
Next Story