அந்தியூர் அருகே பயங்கரம் பெண்ணை கொன்று ஏரியில் பிணம் வீச்சு
அந்தியூர் அருகே பெண்ணை கொன்று ஏரியில் பிணத்தை வீசிச்சென்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரிக்கரை ஓரமாக நேற்று காலை 6 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஏரியின் ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே பொதுமக்கள் அந்த இடம் நோக்கி சென்று பார்த்தார்கள்.
அங்கு தண்ணீரில் பெண் பிணம் மிதந்தது. முதுகில் பாறாங்கல் வைத்து கயிற்றால் கட்டியபடி அரை நிர்வாண நிலையில் பிணம் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனே அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
பிணமாக மிதந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கும். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று தெரிந்தது. பெண்ணின் காதில் அணிந்திருந்த கம்மல், தாலி, கால் கொலுசுவில் ‘ஜே.ஜே.’ என்ற ஆங்கில எழுத்தில் நகைக்கடையின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. ஜே.ஜே என்ற முத்திரை பொறிக்கும் நகைக்கடை அந்தியூரில் உள்ளதால், கொலை செய்யப்பட்ட பெண் அந்தியூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அரை நிர்வாண நிலையில் காணப்பட்டதால் யாராவது மர்மநபர்கள் அந்த பெண்ணை கடத்தி கொண்டு வந்து கற்பழித்துவிட்டு பிணத்தை ஏரியில் வீசி சென்றிருக்கலாம் என்றும், உடல் மேலே மிதந்துவிடக்கூடாது என்பதற்காக முதுகில் பாறாங்கல்லை வைத்து கட்டி போட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிணம் அந்தியூர் அருகே ஏரியில் மிதந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story