ஈரோடு மாவட்டத்தில் 2,407 டன் நெல் கொள்முதல்


ஈரோடு மாவட்டத்தில் 2,407 டன் நெல் கொள்முதல்
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 407 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களில் கடந்த ஆகஸ்டு மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த பாசன பகுதியில் விவசாயிகள் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் காசிபாளையம், அத்தாணி, ஏளூர், கள்ளிப்பட்டி, என்.ஜி.பாளையம், புதுவள்ளியம்பாளையம், டி.என்.பாளையம், அவல்பூந்துறை, கே.ஜி.வலசு, எழுமாத்தூர், பி.மேட்டுப்பாளையம், பெரியபுலியூர், புதுக்கரைப்புதூர், கூகலூர், கரட்டடிப்பாளையம், உக்கரம் ஆகிய 16 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடை செய்த நெல்களை கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி ஒருவர் கூறியதா வது:- ஈரோடு மாவட்டத்தில் 16 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சன்னரக நெல் ஒரு கிலோ 16 ரூபாய் 60 காசுக்கும், மோட்டா ரக நெல் ஒரு கிலோ ரூ.16-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை 2 ஆயிரத்து 407 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story