செஞ்சி, விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி


செஞ்சி, விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி செஞ்சி, விக்கிரவாண்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செஞ்சி,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை யொட்டி செஞ்சி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆலம்பூண்டியில் நடைபெற்றது. செஞ்சி ஏழுமலை எம்.பி. முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேட்டி- சேலை, சமையல் பாத்திரங்கள், ஆடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராஜேந்திரன் எம்.பி., கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி, பால் கூட்டுறவு சங்க தலைவர் குண்டு ரெட்டியார், பேரவை ஒன்றிய செயலாளர் பூங்குன்றம், மாவட்ட மகளிரணி மல்லிகாகுமார், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் மணிபாலன், ஒன்றிய துணை செயலாளர் தேவகிராஜாராம், மாவட்ட பிரதிநிதி அலமேலு பிச்சாண்டி, அனந்தபுரம் முன்னாள் நகர செயலாளர் நடராஜன், கிளை செயலாளர்கள் வெங்கடேசன், சேட்டு, முனுசாமி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பி கிராமத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் வாசுபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செங்கல்வராயன், ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பூங்குணம் சந்திரன் வரவேற்றார்.

இதில் லட்சுமணன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஜெயலலிதா உருவ படத்தை திறந்து வைத்து கட்சி கொடியேற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு வேட்டி-சேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் ஒன்றிய பாசறை இணை செயலாளர் ஜெயவரதன், கூட்டுறவு வங்கி துணை தலைவர் எசாலம் ஏழுமலை, ஊராட்சி செயலாளர் மாணிக்கவேல், மேலவை பிரதிநிதி சிவனகிரி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் அய்யனார், நிர்வாகிகள் முருகேசன், பிரபாகரன், மதியழகன், குமார், கூட்டுறவு சங்க தலைவர் ஜெயமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story