சிவகங்கையில் பிடிபட்ட மாடுகளை மீட்காவிட்டால் கோசாலையில் ஒப்படைக்கப்படும், பிராணிகள் நல வாரிய அதிகாரி எச்சரிக்கை


சிவகங்கையில் பிடிபட்ட மாடுகளை மீட்காவிட்டால் கோசாலையில் ஒப்படைக்கப்படும், பிராணிகள் நல வாரிய அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 March 2018 2:45 AM IST (Updated: 6 March 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் பிடிபட்ட மாடுகளை மீட்காவிட்டால் கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிராணிகள் நல வாரிய அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட பிராணிகள் நல வாரிய தலைமை ஆய்வாளர் செல்வதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் நகரின் வீதிகளில் திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க மாடுகளை அவற்றின் உரிமையார்கள் தங்கள் வீடுகளிள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு பாதுகாப்பு இல்லாமல் தெருக்களில் சுற்றித்திரிந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மாடுகளை பிராணிகள் நல வாரிய ஊழியர்களால் பிடித்து அந்தந்த பட்டிகளில் அடைக்கப்படும்.

சிவகங்கை நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரண்மனைவாசல், மதுரை முக்கு, மேலூர் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் திரிந்த சுமார் 7 மாடுகளை பிடித்து தற்போது பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் உரிய அபராதத்தை செலுத்தி மீட்டுக் கொள்ள வேண்டும். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவற்றின் உரிமையாளர்கள் இந்த மாடுகளை மீட்காவிட்டால் அந்த மாடுகள் கோர்ட்டு மூலம் கோசலையில் அடைக்கப்படும் எச்சரிக்கை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

Next Story