கீழடி அகழ்வாராய்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
திருப்புவனம் அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடி ஊராட்சியில் உள்ளது பள்ளிச் சந்தை புதூர். இந்த பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் பண்டைய தமிழர் நாகரீகத்தை அறியும் வகையில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இதில் முதல்கட்டமாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண்பானை ஓடுகள், கல் ஆயுதங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய கட்டிடங்கள், மண்பானைகள் உள்பட 6 ஆயிரம் பொருட்கள் கிடைத்தன.
இதையடுத்து கடந்த 2016-17-ம் ஆண்டில் 2-வது மற்றும் 3-வது கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதன் முடிவில் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் வைகை ஆற்று கரையின் அருகே தமிழர்கள் நகரங்கள் அமைத்து வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகளை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி 4-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை நடத்து வது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை உதவி இயக்குனர் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மற்றும் பாரதியார் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 20 மாணவ-மாணவிகள் பார்வையிட வந்து அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து அங்குள்ள விவசாயிகள் ஆய்விற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அகழ்வாராய்ச்சி பணியால் இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் உள்ள தென்னை மரம் வேர்கள் சேதமடைந்து தென்னை உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்புவனம் தாசில்தார் கமலா மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நேற்று காலை திருப்புவனத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நேற்று திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கமலா தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், தொல்லியல் துறை உதவி இயக்குனர் சக்திவேல், உதவி பொறியாளர் மாலிக், திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படாததால் பேச்சுவார்ததை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story