அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 292 மனுக்கள் பெறப்பட்டன


அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 292 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 6 March 2018 4:15 AM IST (Updated: 6 March 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 292 மனுக்கள் பெறப்பட்டன.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, அம்மா இருசக்கர வாகனம், திருமண நிதியுதவித் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 292 மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அறிவுரை வழங்கினார்.

பின்னர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார்.

மேலும் இந்த கூட்டத்தில், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புதிட்டம்) பூங்கோதை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story