முறையாக பயிற்சி பெற்ற மயக்கவியல் வல்லுனர்களை அரசு ஆஸ்பத்திரிகளில் நியமிக்க வேண்டும்
முறையாக பயிற்சி பெற்ற மயக்கவியல் வல்லுனர்களை அரசு ஆஸ்பத்திரிகளில்நியமிக்க வேண்டும் என்று மயக்க மருந்து தொழில் நுட்ப பயிற்சி பெற்றவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். அந்த வகையில் உடுமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மயக்க மருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் மயக்க மருந்து தொழில் நுட்ப பயிற்சியை முறையாக படித்து பயிற்சி பெற்று தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் சான்றிதழ் பெற்றுள்ளோம். இந்த படிப்பு தமிழக அரசால் தொடங்கப்பட்டு 12 ஆண்டு ஆகிறது. திருப்பூர் மாவட்டத்தில் முறையாக பயிற்சி பெற்ற எங்களை போன்ற அனுபவம் உள்ள மயக்கவியல் தொழில் நுட்ப வல்லுனர்களை அரசு ஆஸ்பத்திரிகளில் நியமனம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக பதவி உயர்வு என்ற பெயரில் 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்களை மட்டுமே அந்த பணியில் நியமனம் செய்து வருகின்றனர். இதனால் எங்களை போல தமிழக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முறையாக படித்து பயிற்சி பெற்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே எங்களை போன்ற தகுதியானவர்களை மயக்கவியல் தொழிலில் நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தாராபுரம் அருகே உள்ள தூரம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் குடியிருப்பு பகுதியில் தனியார் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப்பண்ணை செயல்பட்டு வருவதால் அதிக அளவு ஈக்கள் குடியிருப்பு பகுதியில் பரவுவதுடன், துர்நாற்றமும் வீசிவருகிறது. இதனால் பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து எங்கள் பகுதிக்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கோழிபண்ணையை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்தவும் அறிவுறுத்தி விட்டு சென்றனர். ஆனால் தொடர்ந்து அந்த கோழிப்பண்ணையை பழைய நிலையிலேயே செயல்படுத்தி வருகிறார். இதனால் அந்த நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த இதுவரை மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமலே இருந்து வருகின்றனர். எனவே பணிநிரந்தரம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Tags :
Next Story