களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் குமரி மாவட்ட வனப்பகுதியை இணைக்க கூடாது
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் குமரி மாவட்ட வனப்பகுதியை இணைக்க கூடாது என்று மலையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து மனு கொடுத்தனர்.
அப்போது, மலையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பில் தோவாளை தடிக்காரன்கோணம் காமராஜபுரத்தை சேர்ந்த ஜினோ மற்றும் பலர் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் குமரி மாவட்ட வனப்பகுதியின் வீரப்புலி காப்புகாடு, அசம்பு காப்புகாடு போன்ற பகுதிகளை இணைக்க முயற்சிகள் நடக்கின்றன. இங்கு 6 சிற்றூராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளன. மேலும் அரசு கிராம்பு தோட்டம், அரசு ரப்பர் கழகம், 100-க்கும் மேற்பட்ட தனியார் தோட்டங்கள் இருக்கின்றன.
இந்த பகுதியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இதை கருத்தில் கொள்ளாமல் சிலரின் தவறான பரிந்துரையால் முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்க முயற்சிக்கின்றனர்.
மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதியை புலிகள் காப்பகத்துடன் இணைத்தால் கூலி தொழிலாளர்கள் தங்களது வேலையை இழக்கும் நிலை ஏற்படும். குமரி மாவட்ட வனப்பகுதிகளில் இயற்கையாகவே யானைகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு யானைகள் சரணாலயம் என அறிவிப்பு பலகை மட்டுமே வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை புனரமைப்பு செய்யவோ, யானைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கு மாறாக எங்கேனும் பிடிபடும் புலிகளை கொண்டுவிட்டும், சில ஆண்டுகளுக்கு முன் வாவுபலி பொருட்காட்சியில் மீட்கப்பட்ட புலிகளை வைத்தும் முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்க அதிகாரிகள் முயலுகிறார்கள்.
எனவே முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் குமரி வனப்பகுதியை இணைக்க கூடாது. அந்த திட்டத்தை கைவிட்டு விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளின் உடமைகளையும், உயிரையும் பாதுகாக்க வேண்டும். மேலும் பாரம்பரியமாக வாழும் யானைகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதே போல் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். மண்டைக்காடு கடற்கரைக்கு செல்லும் சாலையை செப்பனிடுதல் அவசியம். சாலையோரம் அதிகமான கடைகள் அமைக்கப்படுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையோர கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
ஓட்டல்களில் கேரள பக்தர்களுக்கு உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. எனவே அதை தடுக்க கோவிலை சுற்றியுள்ள ஓட்டல்களிலும், திங்கள் நகர் மற்றும் குளச்சல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்களிலும் விலைப்பட்டியல் வைக்க கட்டாயப்படுத்துதல் அவசியம்.
இலவச கழிவறைகள், குளியல் அறைகள் போதுமான அளவில் அமைத்துத்தர வேண்டும். திருவிழாவுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் பொறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
பரக்குன்று சந்திப்பில் உள்ள திருஇருதய ஆலய பங்கு பேரவை நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘திருஇருதய ஆலயத்திற்கு சொந்தமான கடைகளுக்கு முன் பல்வேறு கட்சி கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்‘ என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

Related Tags :
Next Story