தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 March 2018 4:00 AM IST (Updated: 6 March 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

தஞ்சாவூர்,

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 360 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில் நேற்றுகாலை தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.பின்னர் 7 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் போலீசார் அழைத்து சென்றனர். அந்த 7 பேரும் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு இதுநாள் வரை எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் எங்களின் எதிர்காலத்தை கருதி, குடும்ப சூழ்நிலையை நினைத்து நாங்கள் பணிபுரியும் நிர்வாகத்திடம் ஆலோசித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story