காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: புதுச்சேரியில் 8-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம், நாராயணசாமி அழைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவாதிக்க வருகிற 8-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
காவிரி பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்கவேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தினர்.
இதேபோல் புதுச்சேரியிலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்தை புதுவை அரசு கூட்டுகிறது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பி உள்ளார். வருகிற 8-ந்தேதி மாலை 5 மணிக்கு ஆனந்தா இன் ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. மேலும் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story