கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நின்று கொண்டு, தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து மனு அளிக்க செல்வதாக கூறி அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷமிட்டபடி சென்றனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு அருகில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய படியே இருந்தனர்.
உடனே அவர்களை அங்கிருந்த போலீசார் சமாதானப்படுத்தி, பொதுமக்கள் கூட்ட அரங்கிற்கு முக்கியமானவர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். ஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுமக்கள் கூட்ட அரங்கிற்கு சென்று, அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் விஜயாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், எங்களுக்காக சேலம் மெயின்ரோட்டில் வழங்கப்பட்ட 6 ஏக்கர் 83 சென்ட் இடத்தில் நாங்கள் 114 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 35 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால் அந்த இடத்தை சிலர் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, எங்களை காலி செய்ய சொல்கிறார்கள். அதில் செங்கல் சூளை நடத்தவும் பெரிய பள்ளமாக தோண்டி வருகிறார்கள். ஆகவே நாங்கள் வசிக்கும் இடத்திலேயே எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, இது பற்றி விசாரித்து வீட்டு மனைப்பட்டா வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கடலூர் கோண்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், நாங்கள் போதிய இடவசதியின்றி ஒரு வீட்டில் 3, 4 குடும்பங்களாக வசித்து வருகிறோம். எங்களுக்கு தனித்தனியாக வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story