விழுப்புரம் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு


விழுப்புரம் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 6 March 2018 4:30 AM IST (Updated: 6 March 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் வந்தார்.

விழுப்புரம்,

இவர் வடக்கு ரெயில்வே காலனி, தெற்கு ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ரெயில்வே ஊழியர் களின் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து ரெயில்வே குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு குறைபாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கோட்ட மேலாளர் உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், விழுப்புரம் ரெயில்வே குடியிருப்பில் 200 வீடுகள் உள்ள நிலையில் 50 வீடுகளில்தான் குடும்பங்கள் உள்ளன. இதற்கு இங்கு வசிப்போருக்கு பிடிக்கப்படும் தொகை உயர்த்தப்பட்டதும் ஒரு காரணம். ரெயில்வே குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு குறைபாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக மாநில போலீசாரே கவனம் செலுத்த வேண்டும். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே பொருட்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிப்பார்கள். விழுப்புரம் ரெயில் நிலையம், குடியிருப்பு பகுதியில் பயன்படுத்தப்படாமல் ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றை வேறு எதற்கும் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் விழுப்புரம் ரெயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ரெயில்வே உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story