கயத்தாறு அருகே காற்றாலை உதிரிபாகம் ஏற்றி சென்ற லாரி உரசியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன
கயத்தாறு அருகே காற்றாலை உதிரிபாகம் ஏற்றி சென்ற லாரி உரசியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின்மோட்டார்கள் சேதம் அடைந்தன.
கயத்தாறு,
கயத்தாறு அருகே காற்றாலை உதிரிபாகம் ஏற்றி சென்ற லாரி உரசியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின்மோட்டார்கள் சேதம் அடைந்தன. இதில் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
காற்றாலை பண்ணைகள் அமைக்க எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான தனியார் காற்றாலை பண்ணைகள் உள்ளன. இங்கு மேலும் பல புதிய காற்றாலை பண்ணைகளை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
எனவே புதிய காற்றாலை பண்ணைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய நிலங்களின் வழியாக கனரக வாகனங்கள் செல்லாத வகையில், ஆங்காங்கே பள்ளங்களை விவசாயிகள் தோண்டி வைத்து உள்ளனர். ஆனாலும் இரவு நேரங்களில் காற்றாலை பண்ணைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மின்கம்பிகள் அறுந்து விழுந்தன
நேற்று முன்தினம் இரவில் கயத்தாறு அருகே புதுக்கோட்டையில் விவசாய நிலத்தில் காற்றாலை அமைப்பதற்காக, உதிரிபாகங்களை லாரியில் ஏற்றி சென்றனர். அப்போது அந்த லாரியின் மீது இருந்த காற்றாலை உதிரிபாகமானது அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசியது. இதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. மேலும் அதன் அருகில் நின்ற 4 மின்கம்பங்களும் முறிந்த நிலையில் நின்றன.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். பின்னர் அவர், லாரியை நிறுத்தாமல் தப்பி சென்று விட்டார். அந்த லாரியை பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரி அங்கேயே நின்று விட்டது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில், அங்குள்ள விவசாய நிலங்களில் இருந்த மின் மோட்டார்கள் எரிந்து சேதம் அடைந்தன.
சீரமைக்க ஏற்பாடு
நேற்று காலையில் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், பொதுமக்கள் சேதம் அடைந்த மின்கம்பங்களின் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, சேதம் அடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகளை சீரமைக்க ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story