காஞ்சீபுரத்தில் கடையடைப்பு போராட்டம்


காஞ்சீபுரத்தில் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 March 2018 4:00 AM IST (Updated: 7 March 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காஞ்சீபுரம் காந்திரோடு, விளக்கடி கோவில் தெரு, மேட்டுத்தெரு, வள்ளல் பச்சையப்பன்தெரு உள்ளிட்ட சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்ற காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் ஒருவழிப்பாதை மாற்றத்தால் முக்கிய வியாபாரம் நடைபெறும் இடமான காந்திரோடு, மார்க்கெட் போன்று பகுதிகளுக்கு பொதுமக்கள் வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் காந்திரோட்டில் உள்ள கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தபடும் என்று காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமதுவிடம் மனு அளித்தனர்.

இதையொட்டி காஞ்சீபுரம் முழுவதும் முக்கியமாக காந்திரோடு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.

காஞ்சீபுரம் முழுவதும் ஓட்டல்கள், டீக்கடைகள், ஜவுளிக்கடைகள், தனியார் மற்றும் கூட்டுறவு பட்டுசேலை விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

சுற்றுலா நகரமான காஞ்சீபுரத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், கோவில்களுக்கு ஏராளமான பக்தர்களும் வருவார்கள். முழு கடையடைப்பு காரணமாக அவர்கள் சாப்பிட உணவகங்கள் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

Next Story