பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம்
பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்கம் சார்பில் கீழையூர் ஒன்றியம், தலைஞாயிறு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. பாலகுறிச்சியில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொண்டு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும், உடனே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல வேளாங்கண்ணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், கொளப்பாட்டில் மாவட்ட குழு உறுப்பினர் முத்து பெருமாள், ஒன்றிய செயலாளர் செல்லையன் ஆகியோர் தலைமையிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் கீழையூர் ஒன்றிய செயலாளர் முருகையன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story