வாலிபரிடம் ரூ.11 லட்சம் மோசடி: நடிகை சுருதி இன்று நாகை கோர்ட்டில் ஆஜர்

வாலிபரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்ந்து நடிகை சுருதி இன்று (புதன்கிழமை) நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் நடிகை சுருதி. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி செய்தார்.
இதுதொடர்பாக நடிகை சுருதி, அவருடைய தாய் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரை கோவை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த னர். அவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நடிகை சுருதி தன்னிடம் ரூ.11 லட்சம் ஏமாற்றி விட்டதாக நாகப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 24) போலீசில் புகார் செய்து இருந்தார்.
இது தொடர்பாக சுருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் மீது நாகப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கான ஆவணங்களை போலீசார் நேற்று கோவை சிறைக்கு வந்து சமர்பித்தனர். பின்னர் சுருதி உள்பட 3 பேரையும் திருச்சிக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். இன்று (புதன்கிழமை) 3 பேரையும் திருச்சி சிறையில் இருந்து அழைத்துச் சென்று நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.

Related Tags :
Next Story