குறைந்த விலைக்கே நெல் கொள்முதல் செய்கின்றனர் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
வந்தவாசி பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்த விலைக்கே நெல் கொள்முதல் செய்யப்படுவதாக குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர்.
வந்தவாசி,
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானு தலைமையில் நடந்தது. சமூக பாதுகாப்பு நல தாசில்தார் சேகர், துணை தாசில்தார் சம்பத், வேளாண்மை உதவி அலுவலர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
வந்தவாசி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இப்போது நெல் மூட்டைகள் வரத்து குறைவாக உள்ளது. ஆனால் குறைந்த விலைக்குத்தான் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கின்றனர். முறைகேடுகள் நடப்பது குறித்து கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தால் அதனை அவர் கண்டு கொள்வது இல்லை.
சுண்ணாம்புமேடு கிராமத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கக் கூடிய 30 தெருவிளக்குகள் சில நாட்கள் மட்டுமே எரிந்த நிலையில் தற்போது ஒரு விளக்கு கூட எரியவில்லை.
சத்தியவாடி, படூர், அருங்குணம், பெரியகுப்பம் வழியாக வந்தவாசிக்கு பஸ் விடக்கோரி கடந்த ஆகஸ்டு மாதம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபயண போராட்டம் நடத்தியபோது 6 மாதத்தில் பஸ் விடப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 6 மாதம் முடிந்த நிலையில் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்தவாசி வரவேண்டும் என்றால் திண்டிவனம் சென்று வரவேண்டும். இதற்கு அதிக நேரமும், அதிக பணமும் ஆகும். இந்த அவல நிலையை உணர்ந்து பஸ் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வந்தவாசி தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை வசதி இதுநாள் வரையில் செய்து தரப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.

Related Tags :
Next Story