பள்ளி வகுப்பறையில் 6 மாணவிகளுக்கு வாந்தி- மயக்கம் மருத்துவமனையில் அனுமதி
தோகைமலை அருகே பள்ளி வகுப்பறையில் இருந்த 6 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தோகைமலை,
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காவல்காரன்பட்டி, புத்தூர், உப்புகாச்சிபட்டி, கார்ணாம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். வகுப்பறையில் இருந்தபோது எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவி பூமிகாவுக்கு(வயது 15) திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆசிரியர்கள் முயன்றனர். அப்போது அதே வகுப்பை சேர்ந்த மாணவிகளான ராணி(15), நளினி(15), தேவதர்ஷினி(15), சவுமியா(15), கிருத்திகா(15) ஆகியோருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தனர்.
இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து மயக்கம் அடைந்த அனைத்து மாணவிகளையும் சிகிச்சைக்காக காவல்காரன்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று, சிகிச்சை அளித்தனர். மேலும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மாணவிகள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரு மாணவி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மற்றவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 6 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பள்ளியில் இருந்த மற்ற மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்தனர். மேலும் மற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளிக்கு வந்தனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளதால், மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி இருப்பார்கள். மேலும் அந்த தேர்வை எப்படி கையாளுவது என்று தெரியாமல், ஒருவித பயம் ஏற்பட்டு மனச்சோர்வு மூலம் இதுபோன்று மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்கு மூத்த டாக்டர் சிகிச்சைகளை அளிப்பார். அதன்பிறகுதான் முழுமையான தகவல் அறிய வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில் காவல்காரன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொது தேர்வின்போது எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து மனநல டாக்டர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர், என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story