காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்-அமைச்சருக்கு துணிவில்லை
காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்- அமைச்சருக்கு துணிச்சல் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நகர தி.மு.க. சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிதாநவாப், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பழனி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் தர்மன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான பொன்முடி கலந்து கொண்டு பேசியதாவது:-
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக கையாண்டு இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் குறைந்திருக்காது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறியதை கர்நாடக அரசு செயல்படுத்த மறுக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச தமிழக முதல்-அமைச்சருக்கு துணிச்சல் இல்லை.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னால் அனைவரும் அணிவகுத்து சென்றாலே தமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து 666 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அஸ்லம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story