பழம்பெரும் இந்தி நடிகை ‌ஷம்மி மரணம்


பழம்பெரும் இந்தி நடிகை ‌ஷம்மி மரணம்
x
தினத்தந்தி 7 March 2018 3:20 AM IST (Updated: 7 March 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

பழம்பெரும் இந்தி நடிகை ‌ஷம்மி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

மும்பை,

பழம்பெரும் இந்தி நடிகை ‌ஷம்மி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை மும்பை ஜூகு சர்க்கிளில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.

இந்தி திரையுலகில் ‌ஷம்மி அண்ட்டி என செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை ‌ஷம்மி ‘பாய்– பெஹன்’, ‘தில் அப்னா அவுர் பிரீத் பரவி’, ‘ஆப் டிக்கெட்’ உள்பட 200–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இதுதவிர டி.வி. தொடர்களில் நடித்தும் அவர் புகழ் பெற்றார். நடிகை ‌ஷம்மியின் இயற்பெயர் நர்கிஸ். பார்சி குடும்பத்தில் பிறந்த இவர், பிரபல இயக்குனர் சுல்தான் அகமதுவை மணந்தார். 7 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள், பின்னர் விவாகரத்து மூலம் பிரிந்தனர்.

நடிகை ‌ஷம்மி மறைவுக்கு நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் எம்.பி. பிரியா தத், இந்தி திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


Next Story