ஆண் குழந்தையை விற்க முயன்ற தம்பதி கைது


ஆண் குழந்தையை விற்க முயன்ற தம்பதி கைது
x
தினத்தந்தி 7 March 2018 3:23 AM IST (Updated: 7 March 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

ரூ.6 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயன்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

தானே மிராபயந்தரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தானேயை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 4 மாத ஆண் குழந்தையை விற்பனை செய்ய கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த பெண்ணுக்கு அவர்களது குழந்தையை ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குழந்தையை விற்க முயன்ற தம்பதி மற்றும் வாங்க வந்த பெண்ணையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் கைதான தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகனும், மகளும் இருப்பது தெரியவந்தது.


Next Story