60 நாட்களில் 295 தீ விபத்துகள்: மாநகராட்சியின் தீயணைப்புத்துறை செயலிழந்து விட்டது
மும்பையில் தீ விபத்து தொடர் கதையாகி வரும் நிலையில், மாநகராட்சியின் தீயணைப்புத்துறை செயலிழந்து இருப்பதாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் குற்றம் சாட்டி உள்ளார்.
மும்பை,
நாட்டின் நிதி தலைநகரமான மும்பை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தீயின் கோர பார்வையில் இருந்து வருகிறது. அடுத்தடுத்து நகரின் பல்வேறு இடங்களில் தீ விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதுமட்டுமின்றி 30-க்கும் மேற்பட்டோர் தீ விபத்துகளில் சிக்கி பலியாகியும் இருக்கிறார்கள்.
இந்தநிலையில், மும்பையில் கடந்த 60 நாட்களில் 295 தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளதாக மாநகராட்சியின் ஒரு புள்ளி விவரம் தெரிவித்து உள்ளது. மாநகராட்சியின் இந்த புள்ளி விவரம் மும்பைவாசிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மும்பையில் தீ விபத்துகள் தொடர்கதையாகி வருவதற்கு மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மும்பையில் 60 நாட்களில் 295 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளன.
மாநகராட்சியின் இந்த ஆபத்தான புள்ளி விவரம் சிவசேனா அதிகாரம் செலுத்தி வரும் மும்பை மாநகராட்சியின் தீயணைப்புத்துறை செயலிழந்து உள்ளதையே காட்டுகிறது. அவர்கள் 14 பேரின் உயிரை பலிகொண்ட கமலா மில் வளாக கேளிக்கை விடுதி தீ விபத்துக்கு பிறகு கூட எந்த பாடத்தையும் கற்கவில்லை. மும்பை மக்கள் கூர்மையான கத்தியின் முனையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பதற்கு தீயணைப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
உரிய நேரத்தில் பாதுகாப்பு சோதனைகள் செய்திருந்தாலோ, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருந்தாலோ இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்பட்டு இருக்காது.
கேளிக்கை விடுதி தீ விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். ஊழல் அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு உடந்தையாக இருக்கும் மாநகராட்சி கமிஷனரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story