‘பிரஜாகியா’ என்ற பெயரில் நடிகர் உபேந்திரா புதிய கட்சியை தொடங்கினார்
‘பிரஜாகியா‘ என்ற பெயரில் நடிகர் உபேந்திரா புதிய கட்சியை தொடங்கினார். கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி தலைவராக இருந்தவர் நடிகர் உபேந்திரா. அந்த கட்சியின் நிறுவனர் மகேஷ்கவுடா. சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை முடிவு செய்வதில் அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டது. கட்சியில் சர்வாதிகாரியாக செயல்படுவதாக உபேந்திரா மீது நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து உபேந்திரா அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் நேற்று பெங்களூருவில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டேன். நான் புதிய கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளேன். அந்த கட்சியின் பெயர் பிரஜாகியா. இதற்கு முன்பு நான் வகுத்த கொள்கைகள் இந்த கட்சியின் மூலம் அமல்படுத்துவேன். கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி 2 ஆக உடைக்கக்கூடாது என்று கருதி புதிய கட்சியை தொடங்கி இருக்கிறேன்.
நான் வேறு கட்சிகளில் சேருவதாக தகவல்கள் வெளியாயின. இது தவறானது. மாற்று கட்சிகளில் சேரும் எண்ணம் எனக்கு கிடையாது. சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். நாங்கள் சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்போம். நான் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். கர்நாடக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். மக்கள் எங்கள் கட்சியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு உபேந்திரா கூறினார்.
கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சியை விட்டு விலகி நடிகர் உபேந்திரா புதிய கட்சியை தொடங்கி இருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story