டெல்லி மேல்-சபை தேர்தல்: காங்கிரசின் ஆதரவை குமாரசாமி கேட்கவில்லை
டெல்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரசின் ஆதரவை குமாரசாமி கேட்கவில்லை என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) செய்தித்தொடர்பாளர் ரமேஷ்பாபு எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு எம்.பி. பதவிக்கு காங்கிரஸ் ஆதரிக்க வேண்டுமாறு எங்கள் கட்சி தலைவர் குமாரசாமி கேட்டதாகவும், அதை சித்தராமையா நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
காங்கிரசின் ஆதரவை குமாரசாமி கேட்கவில்லை. இதுவரை நடந்து வந்த சம்பிரதாயப்படி போட்டியின்றி எம்.பி.க்களை தேர்வு செய்யுமாறு குமாரசாமி கூறினார். போட்டி ஏற்படும் பட்சத்தில் குதிரை வியாபாரத்திற்கு வழிவகுத்துவிடும் என்றும் அவர் கூறினார். கடந்த முறை டெல்லி மேல்-சபைக்கு நடந்த தேர்தலில் வியாபாரம் அரங்கேறியது. இதனால் தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை சித்தராமையா மறந்திருக்க மாட்டார்.
அந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை உடைத்து ஒரு தொழில் அதிபரை டெல்லி மேல்-சபைக்கு அனுப்பிய பெருமை காங்கிரசுக்கு உண்டு. நாட்டில் காங்கிரசின் நிலைமை மிக மோசமான நிலையில் உள்ளது. இப்போது நல்ல சம்பிரதாயத்தை பின்பற்றாவிட்டால் அந்த கட்சியின் நிலைமை இன்னும் மோசமாக சென்றுவிடும். அதன் அடிப்படையில் 3-வது வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று காங்கிரசுக்கு எங்கள் கட்சி கோரிக்கை விடுத்தது.ஆனால் அரசியல் சாசனத்தின் விருப்பங்களுக்கு மாறாக காங்கிரஸ் கட்சி 3-வது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது அந்த கட்சியின் பிடிவாத போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த தேர்தல் வியாபாரத்திற்காக ஊழல் புகாருக்கு உள்ளாகியுள்ள அசோக் கேனியை காங்கிரஸ் தன்னிடம் சேர்த்துக் கொண்டுள்ளது.
குதிரை வியாபார நோக்கம் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி 3-வது வேட்பாளரை களத்தில் இறக்கலாம். ஆனால் எங்கள் கட்சி நல்ல சம்பிரதாயத்தை பின்பற்றி, வேட்பாளர்களை போட்டியின்றி தேர்வு செய்ய முன்னுரிமை அளிக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story