கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க காலக்கெடு 15-ந் தேதி வரை நீட்டிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க காலக்கெடு 15-ந் தேதி வரை நீட்டித்து காங்கிரஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஏற்கனவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டியுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் தேர்தல் போட்டியிட விண்ணப்பிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதற்கு கடந்த 5-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் 224 தொகுதிகளுக்கு 2,000 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா, சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திராவின் மகன் சந்தோஷ், மந்திரி மகாதேவப்பா மகன் சுனில் போஸ், மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி ஆகியோரும் விண்ணப்பித்து உள்ளனர்.
யாருக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் இறுதி செய்துவிட்டதால், விண்ணப்பிக்க காங்கிரசார் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 10-ந் தேதி கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் விண்ணப்பிக்க காலக்கெடு மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 10-ந் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.20 ஆயிரம், தலித் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.15,000, முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.25 ஆயிரம், தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்கள் ரூ.50 ஆயிரம், மந்திரிகள் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும்.

Related Tags :
Next Story