குழித்துறை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் நகை கொள்ளை


குழித்துறை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 8 March 2018 3:30 AM IST (Updated: 7 March 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

குழித்துறை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

களியக்காவிளை,

குழித்துறையை அடுத்த குருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மனைவி சுசீலா(வயது 55). நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது சுசீலாவின் கழுத்தில்          அணிந்திருந்த 6 பவுன் தங்க நகை மாயமாகி இருந்தது. மேலும், வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் மர்ம நபர் வீட்டின் பின்பக்ககதவை உடைத்து உள்ளே புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த சுசீலாவின் கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

 இதுகுறித்து சுசீலா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story