களியக்காவிளை அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு; கண்ணாடி உடைப்பு


களியக்காவிளை அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு; கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 8 March 2018 3:45 AM IST (Updated: 7 March 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே அரசு பஸ் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

களியக்காவிளை,

மார்த்தாண்டத்தில் இருந்து கொல்லங்கோடு அருகே உள்ள கலிங்கராஜபுரத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பஸ் வழக்கம்போல் மார்த்தாண்டம்– கலிங்கராஜபுரத்திற்கு சென்றது.

பின்னர், இரவு 10.30 மணியளவில் கலிங்கராஜபுரத்தில் இருந்து களியக்காவிளையில் உள்ள அரசு பஸ் டெப்போவிற்கு அந்த பஸ்சை டிரைவர் ஓட்டிச் சென்றார்.

களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளை என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் பஸ் மீது கற்களை வீசினார்கள். இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தி கல்வீசியவர்களை தேடிப்பார்த்தார். ஆனால் கற்களை வீசியது யார் என்று தெரியவில்லை.

இதையடுத்து டிரைவர் பஸ்சை களியக்காவிளை போலீஸ்நிலையத்துக்கு ஓட்டிச்சென்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.


Next Story