பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் போராட்டம்
பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து பதிவிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் போராட்டம் நடந்தது.
திருவள்ளூர்,
திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு முடிவு கட்டியது. அங்கு முதல் முறையாக பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள சோவியத் ரஷியாவின் மறைந்த தலைவர் லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலைகளும் உடைக்கப்படும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து திருப்பத்தூரில் தந்தை பெரியாரின் சிலையை பா.ஜ.க.வினர் சேதப்படுத்தியுள்ளனர். இதை கண்டித்து நேற்று திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கம் சார்பில் திரிபுராவில் லெனின் சிலையை இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் என கருத்து பதிவிட்டிருந்த எச்.ராஜாவை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது திரளான வக்கீல்கள் எச்.ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான கோர்ட்டு எதிரே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் தி.மு.க. சார்பில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திரளான தி.மு.க. நிர்வாகிகள் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் தலைமையில் எச்.ராஜாவை கண்டித்தும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என வலியுறுத்தி அவரது உருவபொம்மையை தீவைத்து எரித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் ஆதிசேஷன், கலாம்பாக்கம் பன்னீர்செல்வம், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் கண்ணதாசன், மகேஷ் ஆகியோர் எச்.ராஜாவின் உருவபொம்மையை தீவைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பூந்தமல்லி நகர தி.மு.க. சார்்பில் நகர செயலாளர்் ரவிகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர்் பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே ட்ரங்க் சாலையில் கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்். பின்னர்் எச்.ராஜாவின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்து ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீீசார்் ஆர்ப்பாட்டக்காரர்்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் வக்கீல் பெரவள்ளூர் ராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் எனவும் கட்சியின் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி புதிய பஸ் நிலையம் முன்னால் உள்ள பெரியார்் சிலை முன்பு தி.மு.க. நகரசெயலாளர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்தனர்.
இதில் திருவள்ளூர் விவசாய பிரிவு அமைப்பாளர் தமிழன் இளங்கோவன், நகர நிர்்வாகிகள் மொதூர்் ரமேஷ், ஈஸ்வரன், ராமலிங்கம், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரத்தில் தி.மு.க. சார்பில் தி.மு.க. மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ.வுமான எழிலரசன் தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்தனர். இதில் நகர செயலாளர் கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகரன் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
இதேபோல் காஞ்சீபுரம் சங்கரமடம் எதிரில் உள்ள பெரியார் சிலை அருகில் காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் இ.வளையாபதி தலைமையில் ஒன்றிய செயலாளர் ராவணன், நகர செயலாளர் ஏகாம்பரம் உள்பட ஏராளமான ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போலீசாரின் தடையை மீறி எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் காந்திரோடு மற்றும் சங்கரமடம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
உத்திரமேரூர் பஸ்நிலையம் அருகே காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் கே.ஞானசேகர், சாலவாக்கம் குமார், பேரூர் செயலாளர் பாரிவள்ளல் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டு எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story