விடுப்பில் சென்ற தன்னை பணியில் சேர்க்க மறுப்பதாக போலீஸ்காரர் குற்றச்சாட்டு, சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியானதால் பரபரப்பு
விடுப்பில் சென்ற தன்னை பணியில் சேர்க்க மறுப்பதாக போலீஸ்காரர் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் பாரதி முகநூலில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மதுரை அருகே கிராமத்தில் பிறந்து சென்னையில் போலீசாக வேலை பார்த்து வருகிறேன். என் பையன் காலில் சீழ்பிடித்து இருப்பதால் உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தால் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டரை சந்தித்து விடுமுறை கேட்டேன்.
இன்ஸ்பெக்டர் விடுமுறை தரமுடியாது என்றார். மடிப்பாக்கம் உதவி கமிஷனரிடம் முறையிட்டேன். அவர் 2 நாள் விடுமுறை தருவதாக கூறினார். நான் ஒரு வாரம் விடுமுறை கேட்டேன். ஆனால் தரவில்லை. நானும் பிறர் போல் துப்பாக்கி எடுத்து சாவதா இல்லை, வேலையை பார்க்கவா என்று ஒரு முடிவுக்கு வராமல் பணியை விட்டு ஊருக்கு சென்றுவிட்டு 10 நாட்கள் கழித்து வந்தபோது என்னை பணியில் சேரவிடாமல் தடுத்தனர்.
பலரிடம் முறையிட்டேன். எதுவும் நடக்கவில்லை. கஷ்டப்பட்டு ஏன் இந்த வேலையில் இருக்க வேண்டும். குடும்பத்தினர், குழந்தைகளை பார்க்க முடியாத போது வேலையில் இருந்து என்ன செய்ய முடியும். இந்த வேலையை விட்டு சொந்த ஊருக்கு சென்று விவசாயம் அல்லது மளிகைக்கடை நடத்தி கொள்ளலாம் என்று செல்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இந்த தகவல் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது பற்றி பள்ளிக்கரணை துணை கமிஷனர் முத்துசாமி அளித்த விளக்கத்தில் கூறியதாவது:-
காவலர் பாரதி பொய்யான செய்தியை பரப்பி உள்ளார். அரசால் அனுமதிக்கப்பட்ட 12 நாட்கள் தற்செயல் விடுப்பையும், 7 நாட்கள் அனுமதி விடுப்பையும் அவர் ஏற்கனவே எடுத்து விட்டதால் மேற்கொண்டு அவருக்கு விடுப்பு வழங்க வாய்ப்பு இல்லை. எனினும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாரதிக்கு மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அவர் அதன் பிறகும் பணியில் சேரவில்லை. 21 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பணிக்கு அறிக்கை செய்யாமல் இருந்ததால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story