நாகை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 18,374 பேர் எழுதினர்
நாகை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 18 ஆயிரத்து 374 பேர் எழுதினர்.
நாகப்பட்டினம்,
தமிழகத்தில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் மொத்தம் 61 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழக அரசு 2017-18-ம் கல்வியாண்டில் இருந்து பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு முதன்முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு பொது தேர்வுகள் இன்று (நேற்று) தொடங்கி அடுத்த மாதம் 16-ந்தேதி வரை நடக்கிறது.
நாகை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 43 மாணவர்களும், 10 ஆயிரத்து 332 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 374 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, கழிவறை வசதி, தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. எந்தவித சிரமமும் இன்றி தேர்வு எழுதுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு பணியில் தலைமையாசிரியர்கள் 80 பேரும், ஆசிரியர்கள் 1,051 பேரும், அலுவலக பணியாளர்கள் 280 பேரும், 156 போலீசார் என மொத்தம் 1,567 பேரும் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வு பணிகளை கண்காணிப்பதற்கு 64 நிலையான பறக்கும் படைகளும், 18 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் தரை தளத்தில் தேர்வு எழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கண்பார்வையற்ற 8 பேருக்கு, சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 17 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால், அன்றைய தேர்வினை தொடர்ந்து எழுத இயலாது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித்தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்ய பள்ளிக்கல்வி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், தாசில்தார் ராகவன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story