பெரியார் சிலைகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு


பெரியார் சிலைகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 March 2018 3:15 AM IST (Updated: 8 March 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் சிலைகளுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுஉள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலைகளை பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

ராமநாதபுரம் ரோமன்சர்ச் பகுதியில் உள்ள பெரியார் நினைவு தூணுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது. இதுதவிர பெரியார் சமத்துவபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பெரியார் சிலை வைக்கப்பட்டுஉள்ளதால் அந்த பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சித்தார்கோட்டை, மண்டபம், பரமக்குடி பாம்பூர், நயினார்கோவில் ஐந்தாம்படை, திருவாடானை பண்ணவயல், முதுகுளத்தூர் காக்கூர், கடலாடி, சத்திரக்குடி மேனூர் ஆகிய சமத்துவபுரங்களில் 2 போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, அந்தந்த பகுதி போலீஸ் நிலைய போலீசார் மேற்கண்ட இடங்களில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story