சொத்து தகராறியல் தந்தை அடித்துக் கொலை மகன், மருமகள் கைது
அவுரங்காபாத் மாவட்டம் கன்னாட் தாலுகா அத்வால் கிராமத்தை சேர்ந்தவர் பர்பாரி சோனவானே(வயது 65). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவுரங்காபாத்,
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவரின் மகனும், மருமகளும் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமானது.
பார்பாரி சோனவானேவின் பெயரில் இருந்த சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என மகன் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதேபோல் சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையின்போது மகனும், மருமகளும் சேர்ந்து அவரை அடித்த கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story