ஓய்வு பெற்ற நர்சு வீட்டில் நகைகளை திருடிய வேலைக்கார பெண் கைது
மும்பை ஒர்லி ஆதர்ஷ்நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி சுவரன்சிங்(வயது70). ஓய்வு பெற்ற நர்சு. இவரது வீட்டில் ஆஷா(45) என்ற பெண் வீட்டு வேலை செய்து வந்தார்.
மும்பை,
ஆஷா திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டார். இந்தநிலையில், சுவரன்சிங்கின் வீட்டில் இருந்த 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட தங்கநகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் பதறிப்போன சுவரன்சிங் தாதர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் ஆஷாவை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தான் நகைகளை திருடியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் ஆஷாவின் வீட்டில் இருந்து 770 கிராம் எடை கொண்ட நகைகளை போலீசார் கைப்பற்றினர்.
ஆஷா நகைக்கடைக்காரர்கள் சிலரிடம் தனது மகள்களின் படிப்புக்காக கடன் வாங்கியிருந்ததும், அந்த கடனுக்காக மீதி நகைகளை அவர்களிடம் கொடுத்து விட்டதும் தெரியவந்தது. அந்த நகைகளையும் மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story