மும்பையில் மின்சார ரெயில்களை இயக்கியதன் மூலம் 3 ஆண்டுகளில் ரெயில்வேக்கு ரூ.4,280 கோடி நஷ்டம்
மும்பையில் மின்சார ரெயில்களை இயக்கியதன் மூலம் 3 ஆண்டுகளில் ரெயில்வேக்கு ரூ.4 ஆயிரத்து 280 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ரெயில்வே இணை மந்திரி கூறினார்.
மும்பை,
மும்பையில் மத்திய- மேற்கு ரெயில்வேக்கள் சார்பில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகள் பொதுமக்களின் போக்குவரத்துக்கு உயிர் நாடியாக விளங்கி வருகின்றன. இந்த ரெயில் சேவைகளை தினசரி சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், மும்பையில் மின்சார ரெயில்களை இயக்குவதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரெயில்வேக்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இது குறித்து நேற்று ரெயில்வே இணை மந்திரி ராயென் கோஹாயின் நாடாளுமன்றத்தில் கூறியதாவது:-
மும்பை மெட்ரோபாலிட்டன் பகுதியில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் மின்சார ரெயில்களை இயக்கியதன் மூலம் ரெயில்வேக்கு வருமானமாக ரூ.5 ஆயிரத்து 206 கோடியே 16 லட்சம் கிடைத்தது.
ஆனால் மின்சார ரெயில் சேவைகளை இயக்குவதற்காக ரூ.9 ஆயிரத்து 486 கோடியே 66 லட்சம் செலவாகி உள்ளது. இதன் மூலம் ரெயில்வேக்கு மூன்று ஆண்டுகளில் 4 ஆயிரத்து 280 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
2014-15-ம் நிதியாண்டில் ரூ.1,426.19 கோடி, அடுத்த நிதியாண்டில் ரூ.1,477.55 கோடி, 2016-17-ம் ஆண்டில் ரூ.1,376.76 கோடி நஷ்டத்தை ரெயில்வே சந்தித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story