நெல்லை பகுதியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
நெல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
நெல்லை,
நெல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
மகளிர் தின விழா
உலக மகளிர் தினவிழா நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சார்பில் ரெயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் முன்னிலை வகித்தார்.
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, சாரதா கல்லூரி மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு, மகளிர் தினத்தின் நோக்கம் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
துண்டு பிரசுரம்
தொடர்ந்து மாணவிகள் ரெயில் பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொடுத்தனர். அதில், ரெயில்களில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும், தங்களின் உடமைகளை எப்படி பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில், ரெயில்வே பெண் போலீசார் சீருடையில் இல்லாமல் சேலையில் வந்து இருந்தனர். அவர்களை மாணவிகள், கை கொடுத்து வரவேற்றனர்.
ஒரே நிற சேலையில் ஊழியர்கள்
மகளிர் தினத்தையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை பெண் ஊழியர்கள் ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
உழைக்கும் பெண்கள் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வீடு, வீடாக சென்று சோப்பு விற்பனை செய்தனர். அவர்களும் மற்ற பெண்களிடம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர், அவர்கள் கைகளை உயர்த்தி மகளிர் தின விழாவில் ஒன்று பட்டு உழைப்போம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
பாளையங்கோட்டையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் மகளிர் தின கருத்தரங்கம் நடந்தது. இதுபோல் பல அரசு அலுவலகங்களில் மகளிர் தினவிழா நடத்தப்பட்டது.

Related Tags :
Next Story