சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
நெல்லை மாவட்டத்தில், 70 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், தகுதியானவர்கள் நாளைக்குள்(சனிக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும், கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
நெல்லை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
ஒருங்கிணைப்பாளர் பணி
நெல்லை மாவட்டத்தில், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதாவது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கணக்கு தொடங்க உதவி செய்யவும், கடன் விண்ணப்பம் மற்றும் அதற்கான ஆவணங்களை தயார் செய்து வங்கிகளுக்கு அனுப்பவும், வங்கி கடனை முறையாக திருப்பி செலுத்த தேவையான ஆலோசனைகளை இந்த பணியாளர் செய்ய வேண்டும்.
மேலும் சுய உதவிக்குழு மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு வழங்கிய வங்கி கடன் வசூலிக்கும் முகவராகவும், காப்பீட்டு துறையின் முகவராகவும் செயல்படவும் வேண்டும். இதுதவிர மாவட்டத்தில் உள்ள முன்னோடி வங்கியின் நிதிக்கல்வி பணியை எடுத்துக்கூற வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு கிராம தொகுப்பு அளவிலும் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுப்பிலுள்ள அனைத்து கூட்டமைப்பின் கீழ் செயல்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும், வங்கிகளுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவார்கள்.
70 பேர் நியமனம்
இந்த பணிக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட வட்டாரங்களான பாளையங்கோட்டை, கீழப்பாவூர், கடையம், நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், அம்பை, ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு மற்றும் பாப்பாக்குடி ஆகிய யூனியன்களில் உள்ள 24 திட்ட களப்பகுதி அலுவலகங்களுக்கு தலா 2 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் வீதம் 48 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதுதவிர புதுவாழ்வு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மானூர், மேலநீலிதநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய யூனியன்களில் 11 திட்ட களப்பகுதிகளுக்கு 22 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆக மொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 70 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தகுதிகள்
இந்த பணிக்கு, பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பை சேர்ந்த குழு உறுப்பினராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் அதே தொகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும். பிளஸ்–2 தேர்ச்சி பெற்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கணித திறமையும், நல்ல தகவல் தொடர்பு திறனும், கிராமத்தில் இருந்து அருகில் உள்ள வங்கிகளுக்குச்செல்ல விருப்பம் உள்ளவராகவும், செல்போன் வைத்திருப்பவராகவும், அதை இயக்கி குறுந்தகவல் அனுப்பவும், பெறவும் திறனுடையவராக இருக்க வேண்டும். இதில் கணினி திறன் உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எழுத்து தேர்வு
இதற்கு நடத்தப்படும் எழுத்து தேர்வுக்கு பிறகு மாவட்ட குழுவால் தேர்வு செய்யப்படுவோருக்கு பரிந்துரை செய்யப்பட்ட பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் மூலம் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களாக பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும்.
இந்த பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள சுயஉதவி குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை நேரில் அணுகியும் விண்ணப்பத்தினை பெறலாம். தகுதியான நபர்கள், தங்களின் விண்ணப்பங்களை கூட்டமைப்பின் பரிந்துரையுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ நாளைக்குள்(சனிக்கிழமை) நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story