மனைவியை குடும்பம் நடத்த அழைக்க சென்ற தொழிலாளிக்கு அடி–உதை; மாமனார்–மைத்துனர் கைது
குடும்ப பிரச்சினையில் பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த அழைக்க சென்ற தொழிலாளியை அடித்து உதைத்த மாமனார் மற்றும் மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்,

மனைவி பிரிந்து சென்றார்
வாசுதேவநல்லூர் அருகில் உள்ள பச்சேரியை சேர்ந்த மரியசூசை மகன் வைரமுத்து(வயது28). கூலி தொழிலாளி. இவருக்கும், சங்கரன்கோவில் காந்திநகர் 3–ம் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகள் மகேஷ்வரிக்கும்(25), கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த மகேஷ்வரி சங்கரன்கோவிலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து வசித்து வருகிறார்.
அடி–உதை
அவரை சமாதானம் செய்து குடும்பம் நடத்த அழைத்து செல்வதற்காக, நேற்று முன்தினம் வைரமுத்து சங்கரன்கோவிலில் உள்ள மாமனாவ் வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த மாமனார் கிருஷ்ணன், மைத்துனர் முத்துகுமார் மற்றும் உறவினர்கள், வைரமுத்துவை அவதூறாக பேசி, மகேஷ்வரியை அனுப்ப மறுத்தனர்.
தன்னுடைய மனைவியை குடும்பம் நடத்த அனுப்புமாறு மன்றாடி கேட்ட அவரை, மாமனார் உள்பட உறவினர்கள் அடித்து உதைத்து துரத்தி அடித்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனார் கிருஷ்ணன், மைத்துனர் முத்துகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் உறவினரான முருகனை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story