தூத்துக்குடி கல்லூரியில் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி மாவட்ட நீதிபதி சாருஹாசினி பங்கேற்பு


தூத்துக்குடி கல்லூரியில் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி மாவட்ட நீதிபதி சாருஹாசினி பங்கேற்பு
x
தினத்தந்தி 9 March 2018 2:30 AM IST (Updated: 8 March 2018 9:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கல்லூரியில் நடந்த உலக மகளிர் தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சாருஹாசினி கலந்து கொண்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கல்லூரியில் நடந்த உலக மகளிர் தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சாருஹாசினி கலந்து கொண்டார்.

மகளிர் தினம்

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நேற்று உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி உதவி பேராசிரியை செல்வலதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் வாசுகி முன்னிலை வகித்தார். தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாராணி, வக்கீல் நர்மதாதேவி ஆகியோர் உலக மகளிர் தினம் பற்றி பேசினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நீதிபதி சாருஹாசினி, மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி சுபத்திரா, 3–வது குற்றவியல் நடுவர் நீதிபதி ரோஸ்கலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சட்ட புத்தகம்

நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சாருஹாசினி பேசும் போது கூறியதாவது;–

பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களின் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் உள்ளன. ஆனால் அந்த சட்டங்களை பெரும்பாலானோர் தெரிந்து கொள்ளலாம் உள்ளனர். பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாணவ பருவத்திலேயே பாட புத்தகங்களுடன் சட்ட புத்தகங்களையும் சேர்த்து படிக்க வேண்டும். அனைவரும் எதிர்காலத்தில் உயர்ந்த பதவியை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் நன்றி கூறினார்.

Next Story