மாவட்ட செய்திகள்

நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை + "||" + Public request to set up the shadows

நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
படப்பை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர்- வாலாஜாபாத் சாலை வழியாக வேலூர், காஞ்சீபுரம் , ஒரகடம், தாம்பரம், கோயம்பேடு, சென்னை, அடையார், தி.நகர், வண்டலூர், வாலாஜாபாத் பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் மாநகர பஸ்கள் நின்று செல்லும் முக்கிய ஊராக படப்பை அமைந்துள்ளது.


இங்கு பஸ் நிறுத்தம் அமைந்து உள்ளது. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

படப்பை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் நிழற்குடை இல்லாததால் கடும் வெயிலில் சாலை ஓரத்தில் நிற்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாமல் நனைந்து கொண்டு நிற்கின்றனர்.

எனவே படப்பை பஸ் நிறுத்தத்தில் உடனடியாக நிழற்குடை அமைத்து தரும்படி அந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.