மாவட்ட செய்திகள்

இளம்பெண் சாவில் துப்பு துலங்கியது: உடலை வனப்பகுதியில் வீசி சென்ற காதலன் கைது + "||" + A young boy was thrown out of the body: a boy who was thrown into the forest was arrested

இளம்பெண் சாவில் துப்பு துலங்கியது: உடலை வனப்பகுதியில் வீசி சென்ற காதலன் கைது

இளம்பெண் சாவில் துப்பு துலங்கியது: உடலை வனப்பகுதியில் வீசி சென்ற காதலன் கைது
கெலமங்கலம் அருகே இளம்பெண் சாவில் திடீர் திருப்பமாக உடலை வனப்பகுதியில் வீசி சென்ற அவரது காதலன் கைது செய்யப்பட்டார்.
ராயக்கோட்டை,


கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ளது அய்யூர் காப்புகாடு. இங்கு குச்சுவாடியில் இருந்து குடியூர் செல்லும் சாலையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கடந்த மாதம் 8–ந் தேதி கிடந்தது. இது குறித்து கெலமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்த பெண்ணின் பெயர் முனிலட்சுமி (வயது 19) என்றும், தொட்டமஞ்சி அருகே உள்ள காளிகுட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது. முனிலட்சுமியும், கெலமங்கலம் ஒன்றியம் சிக்கமஞ்சி கிராமத்தைச் சேர்ந்த திம்மப்பா என்பவரின் மகன் முனியன் என்கிற முனியப்பா (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

துப்பட்டா சிக்கி பலி


சம்பவத்தன்று முனியன் மோட்டார்சைக்கிளில் முனிலட்சுமியை அழைத்துக் கொண்டு குடியூர் மல்லேஸ்வரன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அய்யூர் காப்பு காடு பகுதியில் செல்லும் போது முனிலட்சுமியின் சுடிதார் துப்பட்டா மோட்டார்சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் கீழே விழுந்த முனிலட்சுமி படுகாயம் அடைந்து இறந்தார்.

இதனால் முனிலட்சுமியின் உடலை முனியன் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் வீசி சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து முனியனை கெலமங்கலம் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.