பென்னாகரம், அரூரில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பென்னாகரம், அரூரில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 10:45 PM GMT (Updated: 8 March 2018 9:33 PM GMT)

பென்னாகரம், அரூரில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பென்னாகரம்,


திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், எச்.ராஜாவின் பேச்சை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மாதன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் மன்ற மாவட்ட செயலாளர் வக்கீல் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ஏரியூர் செல்வராஜ், விவசாய விடுதலை முன்னணி செயலாளர் கோபிநாத் மற்றும் பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


இதேபோன்று அரூர் கச்சேரி மேட்டில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேசிங்குராஜன் தலைமை தாங்கினார். மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் ராசேந்திரன், கீரை விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேடம்மாள், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ஜானகிராமன், நிர்வாகிகள் சாக்கன்சர்மா, பாரதிராஜா, கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த குமார், மாது, சிசுபாலன், ரவீந்திரபாரதி, அல்லிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு எச்.ராஜாவுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது எச்.ராஜாவின் உருவப்படத்தை அவர்கள் தீ வைத்த எரித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story