மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + The attack on the employee of the police

டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கீழையூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த தொழுதூர் புதுத்தெருவை சேர்ந்தவர் சின்னையன் மகன் வசந்தகுமார் (வயது48). இவர் வேளாங்கண்ணி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். சம்பவத்தன்று வசந்தகுமார் இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஈசனூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் 4 பேர் திடீரென வசந்தகுமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வசந்தகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைபெற்று வருகிறார்.


வலைவீச்சு

இதுகுறித்து வசந்தகுமார் கொடுத்த புகாரின்பேரில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை தாக்கிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.