மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 March 2018 4:58 AM IST (Updated: 9 March 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆண்டர்சன்பேட்டை சர்க்கிளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோலார் தங்கவயல்,

திரிபுராவில் லெனின் சிலை, உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை, தமிழகத்தில் பெரியார் சிலை ஆகியவை உடைக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா கொடும்பாவி எரிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோலார் தங்கவயல் தாலுகா செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story