சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 March 2018 5:41 AM IST (Updated: 9 March 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிதம்பரம் காந்தி சிலை அருகில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 2017-ம் ஆண்டு சம்பள உயர்வுக்கான பணத்தையும், ஈட்டிய விடுப்புக்கான பணத்தையும் தொழிலாளர்களுக்கு முழுமையாக வழங்காமல் தனியார் நிர்வாகம் கையாடல் செய்துள்ளதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் குமார் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் சுதாகர், பொருளாளர் சந்திரசேகரன், ராஜேந்திரன், பிரேம், குணசேகரன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில், வருகிற 31-ந் தேதிக்குள் ஈட்டிய விடுப்பு தொகை, அரசு வழங்கிய 2017-ம் ஆண்டிற்கான சம்பள உயர்வு ஆகியவற்றை வழங்காவிட்டால் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிர்வாகத்துக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Next Story