களக்காடு தலையணை உயரம் அதிகரிக்கப்படும் புலிகள் காப்பக துணை இயக்குனர் தகவல்


களக்காடு தலையணை உயரம் அதிகரிக்கப்படும் புலிகள் காப்பக துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 9 March 2018 9:00 PM GMT (Updated: 9 March 2018 2:08 PM GMT)

களக்காடு தலையணையின் உயரம் அதிகரிக்கப்படும் என்று புலிகள் காப்பாக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார்.

களக்காடு,

களக்காடு தலையணையின் உயரம் அதிகரிக்கப்படும் என்று புலிகள் காப்பாக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தலையணையில் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது பற்றியும், சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார். அங்குள்ள பெண்கள் உடை மாற்றும் அறைகள், பயணிகள் தங்கும் அறைகள், அருங்காட்சியகம், பயிற்சி கூடம் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், அவைகளை புனரமைக்க வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும், கழிப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஒதுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

 தடுப்பணை உயரம் அதிகரிக்கப்படும்

பின்னர் அவர் கூறுகையில்,‘ சுற்றுலா பயணிகள் அமர்ந்து சாப்பிடுவதற்கும் இருக்கைகள், டேபிள்கள் அமைக்கப்படும். அடுத்த கட்டமாக தலையணை தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

திருக்குறுங்குடி வன சரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் அவருடன் ஆய்வின்போது உடனிருந்தனர்.

Next Story