107-வது நினைவு தினத்தையொட்டி பென்னிகுவிக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை
பென்னிகுவிக்கின் 107-வது நினைவு தினத்தையொட்டி, அவருடைய உருவச் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கூடலூர்,
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 107-வது நினைவு தினத்தை யொட்டி மாவட்டம் முழுவதும் அவருடைய சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள நினைவு மணி மண்டபத்தில் பென்னிகுவிக் சிலைக்கு அனைத்து விவசா யிகள் சங்க மாநில துணை செயலாளர் செங்குட் டுவன் தலைமையில் விவசாயி கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயக் குமார் தலைமையில் கூடலூர் நகர செயலாளர் லோகன்துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பொன்.விஜய், முல்லைப்பெரியாறு அணை மீட்புகுழு தலைவர் ரஞ்சித்குமார், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் இயற்கை வேளாண் விவசாய சங்க தலைவர் செந்தில்குமார் ஆகி யோர் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி பென்னிகுவிக் நகரில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பென்னிகுவிக் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தேனி அருகே பாலார் பட்டியில் பென்னி குவிக் உருவப்படத்துக்கு பொது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story