செந்துறை அருகே குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்


செந்துறை அருகே குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 March 2018 4:45 AM IST (Updated: 10 March 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செந்துறை,

செந்துறை அருகே குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருதூர் தெற்கு பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதில் மின்மோட்டார் பொருத்தி அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் மின்மோட்டார் பழுதடைந்ததால் கடந்த ஒரு வரமாக கிராமமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராமமக்கள் வெகு தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அப் பகுதி கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுநாள் வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராமமக்கள் நேற்று காலை செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் காலிக்குடங்கள் மற்றும் மரக்கட்டைகளை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின் மோட்டார் உட னடியாக சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறியதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story