சென்னையில் உள்ள அண்ணா நூலகத்துக்கு ரூ.6 கோடி செலவில் புத்தகங்கள் வாங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
சென்னையில் உள்ள அண்ணா நூலகத்துக்கு ரூ.6 கோடி செலவில் புத்தகங்கள் வாங்கப்படும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
கோபியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போரின்போது அங்குள்ள நூலகம் சேதம் அடைந்ததுடன், புத்தகங்கள் எரிந்து நாசம் ஆனது. சமீபத்தில் தமிழகம் வந்த இலங்கை கல்வி அமைச்சர் யாழ்ப்பாணம் நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். அதன் பேரில் அந்த நூலகத்துக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூரில் இயல், இசை, நாடகத்தை ஊக்குவிக்கும் வகையில் கலை அறிவியல் நூலகம் அமைக்கப்படும். சென்னையில் உள்ள அண்ணா நூலகத்துக்கு ரூ.6 கோடி செலவில் புத்தகங்கள் வாங்கப்படும். மதுரை தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தை புதுப்பிக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படும். மேலும் திருச்சியில் அறிவியல் நூலகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.
அதுமட்டுமின்றி கோவையில் வானவியல் நூலகம், சிவகங்கையில் தொல்லியல் துறை நூலகம் ஆகியவை அமைக்கப்படும். முன்பு அச்சுக்கலைத்துறையில் சென்னை புகழ்பெற்று இருந்தது. எனவே அந்த துறையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story